Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!

13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!

16 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் அதன் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும், 13ஆவது திருத்தத்தைத் தீர்வுக்கான அடித்தளமாக ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகளுடன் தமது கட்சி கூட்டணி அமைக்கவும் மாட்டாது என அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக இணைந்த வடக்கு, கிழக்கில் சுயாட்சியை உறுதிப்படுத்தும் சமஷ்டி முறைமையே அவசியம் என்றும், ஒற்றையாட்சி கட்டமைப்பிற்குள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகள் தேர்தலை இலக்காகக் கொண்டு சமஷ்டி தொடர்பில் பேசுவதாகவும், தமிழ் தேசிய அரசியல் கொள்கைகளில் இருந்து சில கட்சிகள் விலகிச் செல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்தபோது தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தமது எதிர்ப்பு பௌத்த மதத்திற்கு எதிரானதல்ல என்றும், தனியார் காணிகள் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டமைக்கே எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டியில் விகாரை அமைப்பதற்குரிய காணி வேறொரு இடத்தில் இருக்கின்ற நிலையில், அது போதாது என்பதற்காகத் தனியார் காணிகளைப் பயன்படுத்துவது நியாயமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காணிகளுக்குள் கடந்த 36 ஆண்டுகளாக மக்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும், போர் நிறைவடைந்து மக்கள் தமது வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முயன்றபோது அவர்களது காணிகள் கையகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தையிட்டியில் தொல்பொருள் சான்றுகள் அல்லது முன்னர் விகாரை அமைந்திருந்ததற்கான அடையாளங்கள் இல்லை எனவும், இது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலாளரின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையாகச் செயற்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி
செய்திகள்

2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி

November 16, 2026
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!
செய்திகள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!

November 16, 2026
மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!
செய்திகள்

மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

November 16, 2026
அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!
செய்திகள்

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!

November 16, 2026
ஸ்ரீலங்கன் விமான சேவையை மீட்டெடுக்க விசேட திட்டம்; 2029ஆம் ஆண்டுக்குள் 29 விமானங்களாக அதிகரிக்க இலக்கு!
செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையை மீட்டெடுக்க விசேட திட்டம்; 2029ஆம் ஆண்டுக்குள் 29 விமானங்களாக அதிகரிக்க இலக்கு!

November 16, 2026
நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

November 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.