Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமண வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும்; விருப்பத் தெரிவாக மாற்றவும் கோரிக்கை – உலமா கட்சி!

திருமண வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும்; விருப்பத் தெரிவாக மாற்றவும் கோரிக்கை – உலமா கட்சி!

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போதுள்ள 18 வயது திருமண வயதுச் சட்டத்தை மாற்றி, 16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத் தெரிவாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், அவருக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்குவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

18 வயது பூர்த்தியாகும் வரை திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம், பாதிக்கப்பட்ட சிறுமியின் குழந்தைக்கு அநீதியை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய சமூகச் சூழலில் திருமண வயது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 15 அல்லது 16 வயதுடைய பெண்களைச் சிறுமிகளாகக் கருதுவது தமிழ் பாரம்பரியத்துடன் முரண்படுவதாகவும், இஸ்லாமியச் சட்டத்தில் பருவமடைந்த பின்னர் திருமணம் செய்வது கட்டாயமாக்கப்படாமல் விருப்பத் தெரிவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமண வயது தொடர்பான சட்டத்தில் உரிய மாற்றங்கள் கொண்டுவரப்படாவிட்டால், சட்டத்தின் மீதான அச்சம் காரணமாகப் பிறந்த குழந்தைகள் குகைகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் கைவிடப்படும் அவலநிலை தொடரக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் மீள்குடியேறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு
செய்திகள்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் மீள்குடியேறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு

November 20, 2026
யாழில் தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

யாழில் தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!

November 20, 2026
மாத்தளை பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு!
செய்திகள்

மாத்தளை பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு!

November 20, 2026
மத்திய காசாவில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

மத்திய காசாவில் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!

November 20, 2026
கொலை வழக்கில் 13 ஆண்டுகளின் பின்னர் இருவருக்கு மரண தண்டனை!
செய்திகள்

கொலை வழக்கில் 13 ஆண்டுகளின் பின்னர் இருவருக்கு மரண தண்டனை!

November 20, 2026
சாமர சம்பத்தின் பிணை கோரிக்கை நிராகரிப்பு
செய்திகள்

சாமர சம்பத்தின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

November 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு