கொழும்பு, பொரளை வார்ட் பிளேஸில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (23) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டபோது ஹோட்டலுக்குள் இருந்த மூன்று வெளிநாட்டவர்கள் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தீயிலிருந்து வெளியேறிய புகையைச் சுவாசித்த மேலும் சிலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சொத்து சேதங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







