வடக்கு,கிழக்கில் முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கட்சிகள் அறிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து இன்று வடக்கில் 7 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று கூடிய வேளை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும், ஹர்த்தாலுக்கான திகதி இன்னும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்ததோடு,நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா, வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் மற்றும் நிரோஷ், கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.