Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடல் மட்ட உயர்வினால் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடல் மட்ட உயர்வினால் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் கடல் மட்ட உயர்வு காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை 6,110 ஹெக்டேர் நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டேர் நிலத்தையும் இழக்கும் என நிபுணர் ஒருவர் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

களுத்துறை, வாதுவ பிரதேசத்தில் ‘காலநிலை மாற்றங்கள் சுகாதாரத்தின் மீதான தாக்கம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றிய சார்க் உணவு சங்கத்தின் துணைத் தலைவர் டொக்டர் பி.ஜி.ஹேமந்த குமார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் ஒரு வருடத்திற்குள் அதிதீவிர வானிலை நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், உலகளாவிய காலநிலை அபாய சுட்டெண்ணில் இலங்கை உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக முட்டை தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் சோயாபீன் ஏற்றுமதி கவுன்சிலுடன் இணைந்து இலங்கையில் உள்ள சார்க் உணவு சங்கமும், உலக கோழி அறிவியல் சங்கமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டின் தீவிரம் குறித்து ஹொரண ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரான டொக்டர். குமார, குறிப்பிடுகையில், இலங்கையில் நாளொன்றுக்கு 200,000 மதிய உணவுத் தாள்களும் சுமார் 150,000 பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுவதாகவும் மாதாந்தம் தனிநபர் பொலித்தீன் பாவனை சுமார் 0.5 கிலோ ஆகும் எனவும் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, 2030 மற்றும் 2050 க்கு இடையில், பருவநிலை மாற்றம் ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்ப அழுத்தத்தால் ஆண்டுக்கு 250,000 கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2030 ஆம் ஆண்டளவில் சுகாதாரத்திற்கு ஏற்படும் நேரடி சேத செலவுகள் (விவசாயம்,நீர் மற்றும் சுகாதாரம் போன்ற சுகாதாரத்தை நிர்ணயிக்கும் துறைகளில் ஏற்படும் செலவுகள் தவிர்த்து) 2030 ஆம் ஆண்டளவில் USD 2-4 பில்லியன்களுக்கு இடையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!
செய்திகள்

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

August 20, 2026
மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

August 20, 2026
விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்
காணொளிகள்

விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்

August 20, 2026
பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!
செய்திகள்

பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

August 20, 2026
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!
செய்திகள்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!

August 20, 2026
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!
செய்திகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!

August 20, 2026
Next Post
மயிலத்தமடு மாதவனை விவகாரம்; அதிகரித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடிகள்!

மயிலத்தமடு மாதவனை விவகாரம்; அதிகரித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு