ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் செல்ல முயன்ற இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளாதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து காசாவில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பினை உறுத்திபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.