Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயார்; ஹமாஸ் அறிவிப்பு!

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயார்; ஹமாஸ் அறிவிப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பாலஸ்தீனர்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து, அடக்குமுறை செய்வதாக கூறி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் படையினர் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் கடல், வான், சாலை வழியாக ஊடுருவிய ஹமாஸ் படையினர் தீவிர தாக்குதல் நடத்தினர்.

வெளிநாட்டவர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை அவர்கள் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. காசா தெருக்களில் குண்டு மழை பொழிந்து பெரும்பாலான கட்டிடங்களை தரை மட்டமாக்கியது. காசா நகருக்குள் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டது.

இதற்காக வடக்கு காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. இஸ்ரேல் ராணுவத்தினர் தரைவழி தாக்குதல் எச்சரிக்கையால் வடக்கு காசாவில் இருந்து சுமார் 10 லட்சம் பாலஸ்தீனர்கள் கடந்த 4 நாட்களில் தெற்கு காசாவுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாசின் இராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் அபு ஒபேதே ஒரு தொலைக்காட்சியில் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இஸ்ரேலின் தெற்கில் கடந்த 7ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு 200 பேரை பிணை கைதிகளாக பிடித்துள்ளோம். பிற இடங்களில் 50 பேரை கைது செய்துள்ளோம்.

எங்கள் மக்களுக்கு எதிராக தரை வழித் தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த அச்சுறுத்தல் எங்களை பயமுறுத்தவில்லை.

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

குண்டு வீச்சை நிறுத்தினால்தான் வெளிநாட்டு பிணை கைதிகளை விடுவிப்போம். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து நாங்கள் பிடித்து வைத்த பிணை கைதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு ஹமாஸ் இராணுவ செய்தி தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
ஐ.நாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல்!

ஐ.நாவின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு