யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் சித்த மருத்துவ துறைகளை பீடங்களாக
தரமுயர்த்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழ கத்தின் திருகோணமலை வளாகத்திலதற்போது காணப்படுகின்ற சித்த மருத்துவ துறைகளை பீடங்களாகத் தரமுயர்த்துதல் தொடர்பில் கடந்த
பெப்ரவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதற்காக போதியளவு கல்வி மற்றும் ஊழியர்கள் வசதிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெறத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, சித்த மருத்துவ துறைகளை பீடங்களாக மாற்றம் செய்வதற்குப் போதுமானளவு மனிதவளம் மற்றும் பௌதிக வளங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியது.
கல்வி அமைச்சர் சமர்ப்பித்த குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு குறித்த சித்த மருத்துவ துறைகள பீடங்களாகத் தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.