Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரிப்டோகரன்சி மூலம் கொடுக்கல் வாங்கல்; துறைமுக நகர ஆணைக்குழு அனுமதி!

கிரிப்டோகரன்சி மூலம் கொடுக்கல் வாங்கல்; துறைமுக நகர ஆணைக்குழு அனுமதி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2021ம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 2339/31ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகரில் செயற்படும் மட்டத்தில் காணப்படும் 10 வணிக நிறுவனங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்துக் காணப்படும் பிரச்சினை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது மூன்று முறைகளின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இங்கு தெரியவந்தது.

இந்த ஒப்பந்தங்கள் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டதாக, ஒரு முறைமையின் கீழ் கைச்சாத்திடப்படவில்லையென்பதைக் குழு சுட்டிக்காட்டியது. இதனால் இது தொடர்பில் நான்கு வாரங்களுக்குள் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டைக் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும் குழு பரிந்துரைத்தது. குறித்த பிரதேசத்துக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

இதன் போது நேற்றுமுன்தினம் (24) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த விடயங்கள் தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இரண்டு கிரிப்டோகரன்சி (Cryptocurrency) கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு துறைமுக நகர ஆணைக்குழு அனுமதி வழங்கியிருப்பது குறித்தும் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் கருத்தையும் அறிந்து குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
20 வருடங்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டது லங்கா ஐ.ஓ.சியின் உரிமம்!

20 வருடங்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டது லங்கா ஐ.ஓ.சியின் உரிமம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு