Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று இலங்கை விஜயம் !

ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று இலங்கை விஜயம் !

3 years ago
in செய்திகள்

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு இன்று (30) விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில் முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டனவா என பரிசீலிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைக்கு ஏற்கெனவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனைத் திருத்தியமைக்க வேண்டும் என பிரதான நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.

இருப்பினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அச்சட்டமூலங்களின் உள்ளடக்கத்திற்கு கடுமையான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பின்லாந்து, போலந்து, ஜேர்மனி மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றக் குழுவினர் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

சுமார் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் அவர்கள், அக்காலப்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடையசெய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!
செய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!

October 10, 2026
அனோஜன் தொடர்பில் தேவையற்ற கருத்தாடல்கள் வேண்டாம்; கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!
செய்திகள்

அனோஜன் தொடர்பில் தேவையற்ற கருத்தாடல்கள் வேண்டாம்; கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!

October 10, 2026
யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி; ஜனாதிபதியின் அவசரத் தலையீட்டைக் கோரும் ரஜீவன் எம்.பி!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி; ஜனாதிபதியின் அவசரத் தலையீட்டைக் கோரும் ரஜீவன் எம்.பி!

October 10, 2026
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழக அரசியல்வாதிகள் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது!
செய்திகள்

கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழக அரசியல்வாதிகள் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது!

October 10, 2026
எரிபொருள் விலையைக் குறைக்க ரஷ்ய டீசல் இறக்குமதித் தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்திய அமெரிக்கா!
செய்திகள்

எரிபொருள் விலையைக் குறைக்க ரஷ்ய டீசல் இறக்குமதித் தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்திய அமெரிக்கா!

October 10, 2026
பனாமாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
செய்திகள்

பனாமாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

October 10, 2026
Next Post
அரச கண்காணிப்பிலிருந்த 7 இலட்சம் கிலோ அரிசி மாயம்!

அரச கண்காணிப்பிலிருந்த 7 இலட்சம் கிலோ அரிசி மாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு