யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முடக்காடு பகுதியில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய ஆறு பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கும்பல் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த மகன், மகள் மற்றும் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







