பொலன்னறுவையில் 3 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாடசாலை ஒன்றின் அதிபரான பௌத்த பிக்கு ஒருவரின் குரல் பதிவுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஹிங்குராக்கொட நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்
இச் சம்பவம் தொடர்பான முழு அறிக்கையும் கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் சமர்பிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ள பொலன்னறுவை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பாடசாலைச் சிறுவர்கள் சிலரை தொலைபேசி உரையாடல்கள் மூலம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஒலி நாடாக்கள் பொலிஸாரிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.