Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள மட்டக்களப்பு பொலிஸ் ; சமூக செயற்பாட்டாளர் குற்றசாட்டு!

என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள மட்டக்களப்பு பொலிஸ் ; சமூக செயற்பாட்டாளர் குற்றசாட்டு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத என்னை, கலந்துகொண்டதாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கிக் கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்த பொலிஸார் நீதித்துறையை தவறான பாதைக்கு கொண்டு செல்லுகின்ற படு பயங்கரமான நிலையே உள்ளது. எனவே, பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என பாதிக்கப்பட்ட சமூக செயற்பாட்டளரான கௌரி கோரிக்கை விடுத்துள்ளனார்.

மட்டு. மாநகரசபை முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளரான கௌரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க செங்கலடி பாடசாலைக்கு கடந்த 8 ஆம் திகதி வருகை தந்தார். அப்போது மட்டு மேய்ச்சல் தரை மயிலத்தமடு மாதவனை பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் ஆர்ப்பாட்டம் கொம்மாந்துறை பகுதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரது வீடுகளுக்கு சென்று பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்துகொண்டதாகவும் தங்களிடம் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வாக்கு மூலம் ஒன்றை பெற வேண்டும் என சனிக்கிழமை எனது வீடு தேடிவந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அதற்கு நான் வாக்கு மூலம் தரமுடியும். ஆனால், நான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அன்றை தினம் நான் வீட்டில் இருந்தமைக்கான ஆதாரத்தை உறுதிப்படுத்தியிருந்தேன். அதனை வாக்குமூலத்தில் பதிவு செய்தால் நான் அதில் கையொப்பம் வைப்பேன். அதேவேளை, நீதிமன்ற பிணை முறிப்பத்திரத்தில் கையெழுத்து இடமாட்டேன் என தெரிவித்தபோது அதற்கு பொலிஸார் உடன்பட்டநிலையில் வாக்கு மூலத்தை அளித்து அதில் எனது கையொப்பம் வைத்தேன். அதேவேளை, நீதிமன்ற பிணை முறிப்பத்திரத்தில் கையெழுத்து இடவில்லை. பொலிஸாரின் செயற்பாடு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மட்டக்களப்பில் ஒரு பயங்கரமான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது. நீதி துறையும் பொலிஸாரும் தங்களது கடமையை சரியாக செய்ய தவறியுள்ளனர்.

எனவே, ஒட்டுமொத்த நீதித்துறையும் தவறான ஒரு பாதையில் சென்றுக்கொண்டிருக்கின்றது. இல்லாத ஒரு விடயத்தை உருவாக்குகின்றது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜனதிபதி உடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!
செய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

October 30, 2026
ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்
செய்திகள்

ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்

October 30, 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!

October 30, 2026
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு

October 30, 2026
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!

October 30, 2026
இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!
செய்திகள்

இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!

October 30, 2026
Next Post
இலங்கையை பகைத்துக்கொள்ளுமா இந்தியா? – (கட்டுரை)

இலங்கையை பகைத்துக்கொள்ளுமா இந்தியா? - (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு