Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் உருவாகிவரும் பேய்வீடு!

யாழில் உருவாகிவரும் பேய்வீடு!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பணத்தில், “Artistic Event Management” ஏற்பாட்டில் திகில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் ஆனைப்பந்தி மெதடிஸ் மிஷன் வித்தியாலயத்திற்கு அருகிலேயே இந்த திகில் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வீட்டினுள் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் செல்ல முடியும். ஒலி , ஒளி அமைப்புக்களுடன் மிக பிரமாண்டமாக இந்த வீடு உருவாகி வருகிறது.

பேய் படங்களை பார்க்கும் போது ஏற்படும் திகில் அனுபவங்களை இந்த வீட்டினுள் சென்று திரும்பும் போது நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும். வீட்டினுள் சுமார் 30 நிமிடங்கள் ஒவ்வொருவரும் செலவிட முடியும். அந்த 30 நிமிடங்களும் பல்வேறு வகையான திகிலான அனுபவங்களை உணர முடியும். ஒரு நாளைக்கு 800 பேர் வரையிலையே வீட்டுக்குள் அனுமதிக்க கூடிய நிலைமைகள் காணப்படுவதனால் , நுழைவு சீட்டுக்களை முற்பதிவு செய்து கொள்வது சிறந்தது.

நுழைவு சீட்டானது ஆளொருவருக்கு 750 ரூபாய் ஆகும். அதனை பெற்றுக்கொள்ள 0776016344 மற்றும் 0772018833 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும்.

அதேவேளை திகில் வீட்டுக்கு வெளியே உணவு திருவிழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அத்துடன் முகங்களில் படங்களை கீறி கொள்ளவும், செல்பி பூத்தில் படம் எடுத்து மகிழ கூடியவாறான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

அவற்றுக்கான கட்டணங்கள் வேறானதாகும். இந்த திகில் வீட்டுக்கு 10 வயதுக்கு குறைவானவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள் , இருதய நோய் உள்ளவர்கள், வருவதை தவிர்த்து கொள்வது நல்லது. ஏனெனில் இது மிக பிரமாண்டமான முறையில் திகிலை ஏற்படுத்த கூடியவகையில் உருவாகி வருகின்றது என மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா
செய்திகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா

May 18, 2025
மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 18, 2025
மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்
காணொளிகள்

மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்

May 18, 2025
யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
செய்திகள்

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு

May 18, 2025
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
Next Post
கிளிநொச்சி வைத்தியசாலையை முடக்கி சுகாதார ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையை முடக்கி சுகாதார ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு