தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை கடந்த மாதம் 22 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 சாரண மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்திருந்தனர்.
புளோரிங்டன் டயன்சித், புளோரிங்டன் டயன்பிரிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகிய மாணவர்களே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இவர்களுக்கான பாராட்டு நிகழ்வானது நேற்று (01.11.2023) கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் தலைமையில் காலை ஒன்றுகூடலின் போது நடைபெற்றது.
இதன்போது இம்மாணவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறித்த சாதனையை நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.