Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிதாக சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டம்; ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும்- சுமந்திரன் எம்.பி!

புதிதாக சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டம்; ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும்- சுமந்திரன் எம்.பி!

3 years ago
in செய்திகள்

புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம். எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.

இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது.குறித்த சட்டமூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம்; 13 சிறுமிகள் மீட்பு!

அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம்; 13 சிறுமிகள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.