Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

2 months ago
in செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் தொல்லியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மற்றும் கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கடைகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், சில பிரதேச சபைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்து, தாந்தாமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் இலச்சினையில் அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக பிரதிபலிக்கும் வகையிலான மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குச்சவெளி பகுதியில் இடம்பெறும் அபிவிருத்திகள் மற்றும் தொல்லியல் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தல் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, திருக்கோணேஸ்வரர் ஆலய அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் என்பது ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ மட்டும் உரித்தான விடயம் அல்ல என்றும், அது அனைத்து மக்களின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்பதால் சட்டம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

"புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.