நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோகினி நீர்வீழ்ச்சிக்குள் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியை விட்டு விலகிய முச்சக்கரவண்டி நேரடியாக நீர்வீழ்ச்சிக்குள் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நேரத்தில் முச்சக்கரவண்டியில் இரு பெரியவர்களும் இரு குழந்தைகளும் பயணம் செய்திருந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இரு குழந்தைகளும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








