வங்காளவிரிகுடாவில் “மிதிலி” புயலானது நிலை கொண்டுள்ளதால் கடலில் பயணிப்போரும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த புயலானது இன்று வடக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை கடக்கவுள்ளது .
இதன் போது காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றராகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.