Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு யாழில் திறந்து வைக்கப்பட்டது!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு யாழில் திறந்து வைக்கப்பட்டது!

2 years ago
in செய்திகள்

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது.

இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அமரர் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நேற்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்பொழுது பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான சிவபாதம் இந்திரவதி ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன, யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ச்சியாக சிறுவர் சிறுமியர்களால் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை திரைநீக்கம் செய்யபட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்கபெற முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கந்தரோடையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
செய்திகள்

கந்தரோடையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

June 16, 2025
புதிய வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவதில் இரண்டு மாதம் தாமதம்
செய்திகள்

புதிய வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவதில் இரண்டு மாதம் தாமதம்

June 16, 2025
ஆறு பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

ஆறு பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 16, 2025
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்
செய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்

June 16, 2025
காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்
செய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

June 16, 2025
வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு
செய்திகள்

வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு

June 16, 2025
Next Post
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு