Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை

இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை

50 minutes ago
in செய்திகள்

திருகோணமலை – மொரவெவ குளத்தை அண்டிய காட்டுப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுவரும் கால்நடைகள், சில விசமிகளால் வெட்டியும், சுட்டும் கொல்லப்படுவதாகவும், பண்ணையாளர்களின் தற்காலிக குடிசைகள் சேதமாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருவதாக பண்ணையாளர் கவலை வெளியிடுகின்றனர்.

தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் சிலர் அரசாங்கத்தின் முறையான அனுமதியுடன் மொரவெவ குளத்தை அண்டிய காட்டுப்பகுதியில் வைத்து தங்களுடைய கால்நடைகளை பராமரித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளை விசமிகள் சிலர் மொரவெவ பிரதான வீதிக்கு துரத்திவிட்டதால் சில விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று மாடு ஒன்றும் உயிரிழந்துள்ளது. இதேநேரம் குறித்த குழுவினர் காட்டில் சில கால்நடைகளை கட்டி வைத்து இறைச்சிக்காக வெட்டியுள்ளதாகவும் இதேவேளை கடந்த திங்கட்கிழமை (26) தங்களது தற்காலிக குடிசைகளை சேதமாக்கியிருந்ததாகவும் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை எனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் 2026.10.21 திகதியிட்டு வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தில், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களின் ஆலோசனை மற்றும் மொரவெவ பிரதேச நீர்ப்பாசணப் பொறியியலாளரின் 2023.11.20 திகதியிடப்பட்டு மேய்ச்சலுக்கான அனுமதி வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாகவும் கடவனை, அட்டவானை, மாணன்ட குளம், மாதுமை, மொறவேவா ஆகிய இடங்களுக்கு மாடுகளை கால்நடையாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இச்சம்பவங்கள் ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் மூவினத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களிடமும் தற்போது 7000க்கும் அதிகமான கால்நடைகள் இருக்கின்றன. இவற்றில் 4000க்கும் அதிகமானவை எடுமை மாடுகள், இதில் 1200க்கும் மேற்பட்டவைகள் தம்பலகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களுக்கு சொந்தமானவை இவற்றை பராமரிப்பதிலேயே சிக்கல்கள் நிலவுகின்றன. பெரும்போக செய்கை மேற்கொள்ளும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஊருக்குள் வைத்து கால்நடைகளை பராமரிக்க முடியாது.

இந்த இரு மாதங்களும் காட்டுப்பகுதியில் வைத்தே கால்நடைகளை பராமரிக்கவேண்டியுள்ளது. இருப்பினும் தம்பலகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்கள் பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே குறிப்பாக 1976ஆம் ஆண்டு காலத்தில் இருந்தே மொரவெவ காட்டுப்பகுதியில் வைத்து கால்நடைகளை பராமரித்து வருகின்றார்கள். இது மொராவெவ பகுதியில் காலாகாலமாக வாழும் பெரும்பான்மையின மக்களுக்கு நன்கு தெரியும் ஆனால் பின்னர் குடியேறிய சிலரே இவ்வாறான குழப்பத்தை ஏற்படுத்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் தமக்கு தமது கால்நடைகளை பராமரிப்பதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும், பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

November 2, 2026
கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!
செய்திகள்

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

November 2, 2026
அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை
செய்திகள்

அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை

November 2, 2026
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு

November 2, 2026
எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!

November 2, 2026
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

November 2, 2026
Next Post
கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு