Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு

இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவீனம் 937.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 2025ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியில் இச்செலவீனம் 577 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

அதேவேளை, கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் வெளிநாட்டுப் பயணச் செலவு 64.9 சதவீதத்தால் அதிகரித்து, 122 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இது 74 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மாத்திரமே பதிவாகியிருந்தது.

வெளிநாட்டுப் பயணச் செலவீனங்களில் ஏற்பட்டுள்ள இந்த தீவிர அதிகரிப்பானது, செப்டம்பர் மாதத்தில் சேவைத் துறைகள் சார்ந்த வெளிப்பாய்ச்சல் உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, மொத்த சேவைத் துறைகள் வெளிப்பாய்ச்சல் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பதிவான 322.4 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 36.7 சதவீதத்தால் அதிகரித்து 440.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக, செப்டம்பர் மாதத்துக்கான இலங்கையின் சேவைகள் கணக்கு மிகையானது 34.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 119 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது. அத்துடன், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்கான ஒட்டுமொத்த சேவைகள் கணக்கு மிகையும் 22.3 சதவீதத்தால் குறைவடைந்து 2.21 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

சேவைகள் துறைசார் உட்பாய்ச்சலின் வளர்ச்சியை விடவும், வெளிநாட்டுப் பயணம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான கொடுப்பனவுகள் துரிதமாக அதிகரித்தமையே சேவைகள் கணக்கு மிகை வீழ்ச்சியடைந்தமைக்கு முக்கிய காரணம் என மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு news21 இணையதளத்தை பார்வையிடுங்கள்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!
செய்திகள்

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

November 2, 2026
இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை
செய்திகள்

இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை

November 2, 2026
அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை
செய்திகள்

அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை

November 2, 2026
எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!

November 2, 2026
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

November 2, 2026
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தது
செய்திகள்

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தது

November 2, 2026
Next Post
அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை

அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு