Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனவாதம் சிவலிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை; ”சிவ தோசம் – குல நாசம்” என்கிறார் சிறீதரன்!

இனவாதம் சிவலிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை; ”சிவ தோசம் – குல நாசம்” என்கிறார் சிறீதரன்!

2 years ago
in செய்திகள்

இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டுவைக்கவில்லை. சிவ தோசம் – குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது. சிவன்மீது கைவைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கிச் செல்லும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி
மற்றும் இறக்குமதி மீதான கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-வவுனியா வெடுக்குநாறி காட்டுப்பகுதியில் தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தின் சிவலிங்கங்கள் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன. அம்மன் விக்கிரகத்தின் கழுத்துப் பகுதி வெட்டப்பட்டு வீசியெறியும் அளவுக்கு இந்த நாட்டில் இனவாதம் மேலோங்கியுள்ளது.

ஓர் இனத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்த மத நம்பிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர குறைவடையவில்லை.தமி ழர்களின் இருப்பும்,சைவத்தின் இருப்பும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுவது கவலைக்குரியது.

முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியில் இருந்து சிவ சின்னங்கள்,சூலம் மற் றும் சிவலிங்கம் பெரும்பான்மை சமூகத் தால் அழிக்கப்பட்டது.குருந்தூர் மலையில் விகாரை நிர்மாணிக்கும் பணிகளுக்கு முல்லைத்தீவு மாவட்டம் பல தடவைகள் தடை உத்தரவு பிறப்பித்தும், நீதிமன்றத்தை மதிக்காமல் விகாரை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.தெற்கில் மாத்திரமே நீதிமன்றங்கள் சுயாதீனமாகவும், தைரியமாகவும் செயற்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவை எவரும் குறிப்பாக பெரும்பான்மை தரப்பினர் மதிப்பதும் இல்லை – செயற்படுத்துவதுமில்லை.

வவுனியா வெடுக்குநாறி பகுதியில் தமிழர்கள் 1957 ஆம் ஆண்டு காலமும் சிவ வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. அத்துடன் தொல்பொருள் அளவையி யல் வரைபுக்குள் உள்வாங்கப்படவில்லை,இவ்வாறான பின்னணியில் இந்துக்களின் மத உரிமைகளுக்கு தொல்பொருள் திணைக்களம் இடையூறு விளைவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இனவாதம் மற்றும் பௌத்தவாதம் பற்றி மேலோங்கி கருத்துரைக்கின்ற தரப்பினர் தான் ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.

தமிழர்களின் காணி உரிமையும் பறிக்கப்படுகிறது. மத உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.‘சிவன் தோசம் – குல நாசம்’ என்ற வாக்குக்கு இந்துக்கள் மத்தியில் அதிக நம்பிக்கை உள்ளது.சிவன் தலையில் கை
வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காண்பதாக சர்வதேசத்துக்கு பொய்யுரைத்து விட்டு,பன்னாட்டையும் ஏமாற் றும் செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றன.

உடைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் விக்கிரகங்களை மீள் அமைப்பதாக இரு அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடுக்குநாறி பகுதிக்கு விஜயம் செய்தார்கள்.இந்த விவகாரம் சட்ட விசாரணைக்கு உட்பட்டுள்ளது. ஆகவே சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுவிட்டு திரும்பி விட்டார்கள்.

உடைக்கப்பட்ட சிலைகள் மற்றும் சிவலிங்கத்தை மீள் அமைப்பதற்கு எவ்வித சட்ட தடைகளும் காணப்பட வில்லை. உண்மையில் இந்த அமைச்சர்கள் ஆடையுடன் திரிகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கௌதாரிமுனை பகுதியில் 100 ஹக்கர் காணி இறால் பண்ணை செய்கைக்காக
அளக்கப்படுகிறது. 3700 ஆண்டு கால மாக கௌதாரிமுனை பகுதியில் வாழும் தமிழர்கள் இந்தச் செயற்பாட்டுக்கு கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழர்களின் பூர்வீக காணிகளைச் சுவிகரித்து சிங்கள குடியேற்றத்தை அமைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் துணை செல்வது கவலைக்குரியது- என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
Next Post
நான்கு லீற்றர் ஏழு லீற்றராக மாறிய எரிபொருள் ஒதுக்கீடு!

நான்கு லீற்றர் ஏழு லீற்றராக மாறிய எரிபொருள் ஒதுக்கீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.