Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
துப்பாக்கி முனையில் ஆசிரியருக்கு கட்டாயக் கல்யாணம்!

துப்பாக்கி முனையில் ஆசிரியருக்கு கட்டாயக் கல்யாணம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் கடத்தி செல்லப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு துப்பாக்கி முனையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்படமானது மணமகனை கடத்தி திருமணம் நடத்தும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அப்படத்தில் நடைபெற்ற கட்டாயத் திருமணம் போன்றே பீகாரில் உண்மையாக மணமகனை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணத்தை முடித்துள்ளனர்.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கௌதம் குமார் என்பவர் சமீபத்தில் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். படேபூர் கிராமத்தின் ரெபுரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி நியமனம் வழங்கப்பட்ட அவரை, கடந்த புதன்கிழமை (நவ.29) பள்ளி வளாகத்தில் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட கௌதம் குமாரை செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய், துப்பாக்கி முனையில் வைத்து தனது மகள் சாந்தினிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அரச வேலையில் உள்ள இளைஞரை கடத்தி சென்று திருமணம் நடத்திய நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் சம்பவம் வெளியில் கசியத் தொடங்கியதும் கௌதம் குமாரை மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் குமாரை கடத்தல்காரர்கள் தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் இது போன்ற கட்டாய திருமணங்கள் புதியதல்ல. ‘பகத்வா விவாஹ்’ எனப்படும் ’மணமகன் கடத்தல் கல்யாணம்’ என்பது பீகாரின் பின்தங்கிய மாவட்டங்களில் பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, பேகூசராய் பகுதியில் விலங்கிற்கு சிகிச்சை அளிக்க வந்த கால்நடை மருத்துவருக்கு கட்டாய கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!
உலக செய்திகள்

ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!

October 28, 2026
பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!
செய்திகள்

பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!

October 28, 2026
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
செய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!

October 28, 2026
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!

October 28, 2026
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
உலக செய்திகள்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

October 28, 2026
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

October 28, 2026
Next Post
நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்று சாதனை!

நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்று சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு