எந்தவொரு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் சேவைகளுக்காக அந்த நிறுவனங்களினால் வழங்கப்படும் ஒப்பந்த நிபந்தனைகளை நன்கு அறிந்து கையொப்பமிடுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் சுஜிதா ஜெகஜீவன் இதனை குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், சில நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒப்பந்தங்களை நன்கு அறியாமல், அதற்கு சிலர் ஒப்புதலை வழங்குகின்றனர்.
ஆகையால் எந்தவொரு நிதி நிறுவனங்களின் ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு முன்னர் ஒப்பந்தங்களை அறிந்துக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.