Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வருங்கால மருமகளை துஷ்பிரயோகம் செய்த மாமனாருக்கு விளக்கமறியல்!

வருங்கால மருமகளை துஷ்பிரயோகம் செய்த மாமனாருக்கு விளக்கமறியல்!

3 years ago
in செய்திகள்

புத்தளம் – ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எதிர்பார்த்திருந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கூலித் தொழில் செய்து வரும் தனது 18 வயது மகனுக்கு , 16 வயது நிரம்பிய சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக குடும்பத்தினர் தீர்மானித்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 18 வயதுடைய இளைஞன் தான் திருமணம் செய்துகொள்ள எதிர்பார்த்து இருக்கும் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அத்துடன், அந்த இளைஞனின் தாயும் கர்ப்பமாக இருந்ததால், தனது தாயை சில நாட்களாக மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சமயத்தில் இளைஞனின் தந்தை, அந்த சிறுமியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தான் தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சிறுமி, தான் திருமணம் முடிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் அந்த இளைஞரிடம் கூறியுள்ளார்.

பின்பு சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபர் ஆனமடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (07) ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
Next Post
தொடரும் காட்டுயானை தொல்லை; மட்டு இலுப்படிச்சேனை பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

தொடரும் காட்டுயானை தொல்லை; மட்டு இலுப்படிச்சேனை பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு