Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கையளிக்கப்பட்டது கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம்!

கையளிக்கப்பட்டது கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஓரு நாள் சம்பளத்தை மீளப்பெறல் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள் ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று 09 மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அண்மையில் கொவிட் 19 தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் ஒரு நாள் சம்பளத்தினை ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வியாளர்கள் சம்மதம் இன்றி பெற்றுக் கொண்டமை தொடர்பாக நாங்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தோம் .

அந்த வழக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆகிய பொன்னுத்துரை உதயரூபன், பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அத்தோடு நமது தலைவர் பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தாக்கலில் சட்டமா அதிபரும் பிரதிவாதியாக குறிப்பிட்டதன் காரணமாக சட்டமா அதிபர் அண்மையில் இது தொடர்பாக சம்மதம் தெரிவித்து மீண்டும் அந்த ஒரு நாள் பெற்றுக்கொண்ட பணத்தினை திருப்பி செலுத்துவதாக உறுதிமொழி உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள் ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

மிகக் கூடிய பணத்தொகையாக திருகோணமலை கல்வி வலயத்தில் 2.895 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2.795 மில்லியன் ரூபாவும் கல்முனை கல்வி வலயத்தில் 3.846 மில்லியன் ரூபாவும் மீண்டும் அதிபர்கள், ஆசிரியர்களிடம் ஒரு நாள் பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்தினை பெரும்பாலான ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்த பணத்தினை பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களும் கல்வி திணைக்களத்தின் உடைய கல்வி பணிப்பாளர்களையோ அல்லது அங்குள்ள கணக்காளர்களையோ சந்தித்து அந்த பணத்தினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கல்குடா வலயத்திற்கு ஆக குறைந்த ஒரு நாள் சம்பளத்தினை பெரும்பாலும் அறவிடவில்லை என குறிப்பிடலாம் ஏனைய வலயங்கள் மிகக் கூடுதலான பணத்தினை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பணத்தினை ஓய்வு பெற்றவர்களும், அரசாங்க ஊழியர்களும், கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பணம் அரவிடப்பட்ட ஊழியர்களும் அந்த பணத்தினை மீண்டும் தங்களுடைய குறிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆசிரியர்கள், அதிபர்கள் தொடர்ச்சியாக அதாவது இலங்கை அரசாங்கத்தினுடைய சில தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற போது கைது செய்யப்படுவது வழமையாக இலங்கையில் காணப்படுகின்றது.

எமது பொதுச் செயலாளர் கூட கைது செய்யப்பட்டு முல்லைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் எனவே அடக்கு முறையான ஆட்சியாளர்கள் மத்தியில் எமது நியாயமான ஜனநாயக போராட்டங்களை முறியடிப்பதற்காக நடத்தப்படும் இதனை நான் வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக பல்வேறு நாடுகளிலும் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆசிரியர்கள், அதிபர்கள் மாத்திரம் அல்ல ஊடகவியலாளர்களும் பல்வேறான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கையினுடைய ஜனநாயகம் இன்று ஒரு கேள்விக்குறியாக மாறி இருக்கின்றது என்பதனையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக பல்வேறு அழுத்தங்களை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறான சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு அதாவது ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க வாதிகளை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கான சட்டங்களை தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதனை இன்று நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்
செய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்

May 24, 2025
இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

May 24, 2025
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

May 24, 2025
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
செய்திகள்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

May 24, 2025
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்

May 24, 2025
நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க
செய்திகள்

நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க

May 24, 2025
Next Post
லண்டனில் சாதனை படைத்த சாய்ந்தமருது 11 வயது மாணவி!

லண்டனில் சாதனை படைத்த சாய்ந்தமருது 11 வயது மாணவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.