தனது சொந்த மகனின் நகைக்கடையில் திருடிய தாய் உள்ளிட்ட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகமை நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ராகமை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் சனிக்கிழமை (09) பிற்பகல் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்டிருந்த 14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.