அண்மையில் இடம்பெற்ற இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஏ.ஆர். பாத்திமா ஹுதா முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வாறு தேசிய, மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று, தெரிவு செய்யப்பட்ட மாணவியினை உற்சாகமளிக்கும் நோக்குடன் பாடசாலை பொது காலை ஆராதனை ௯ட்டத்தில் இவருக்கான வெற்றி பதக்கங்கள், சான்றிதழ்களை அதிபர், பிரதி உதவி அதிபர்களினால் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
அதேசமயம் இப்போட்டியில் 1000க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இவர் 2021,2022ம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டி நிகழ்ச்சியில் முறையே தங்க, வெள்ளி பதக்கத்தை பெற்று தொடர்ந்தேர்ச்சியாக வரலாற்று சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.