அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளும் நேர அட்டவணையையும் தற்போது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத மற்றும் அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்ய முடியாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பிரதி, பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான அஞ்சல் அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதிலுமுள்ள ஆலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதியத் தடை!
கதிர்காமம் ஆலயம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து பெறப்படும் தங்கம், பணம் உள்ளிட்ட அனைத்தையும் பூசகர்களால் எடுத்து செல்ல முடியாது எனவும் ஆலயங்களின் சகல பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கீர்த்தி சிறிபத்தன தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அதிகாரங்களின்படி ஆலயங்களின் அனைத்து பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காமம் ஆலயத்தில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பூசகர்களை சேவையில் இணைக்கும் அதிகாரமும் பஸ்நாயக்க நிலமேக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.