மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த நியமனம் இன்று (14) வியாழக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய ஒரு சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான திருமதி.முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்திருந்ததோடு, இறுதியாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.