மட்டக்களப்பு அமிர்தகழி விளையாட்டு கழகத்தின் ”பிரிமியர் லீக் – 2023” நேற்றையதினம் 09.04.2023 மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியானது மட்டக்களப்பு அமிர்தகழி விளையாட்டு கழகத்தின் ,அமிர்தகழி சிவப்பு , அமிர்தகழி நீலம், அமிர்தகழி பச்சை , அமிர்தகழி மஞ்சள் என்னும் அணியினரிடையே நடைபெற்றதுடன் போட்டி முடிவில் அமிர்தகழி சிவப்பு அணியினர் வெற்றி வாகை சூட்டியுள்ளனர். இவ்விளையாட்டுக்கான ஜெசிகளை மட்டக்களப்பின் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.