மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து இரவு 1.15 மணிக்கு புறப்படும் புகையிரத்திற்கு காலை 10.15 மணியளவில் பெட்டி மாற்றும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் எஞ்சின் ( இயந்திரம்) கோளாறு காரணமாக புகையிரதம் வைரவர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள புகையிரத கடவையிலேயே நின்றுவிட்டது. அதனால் பொது மக்களை அக்கடவையை உபயோகிப்பதனை தவிர்த்து பார் வீதியையோ அல்லது குமாரத்தன் கோவில் வீதியையோ பயன்படுத்துமாறு அந்த கடவையின் காவல் அதிகாரி பொதுமக்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

