போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிரஜை உட்பட இருவரை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை வலய பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 56 கிலோபோதைப்பொருளை பொலிஸார் கைப்ற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையை சேர்ந்த உதயகுமார் மற்றும் பெரம்பூரை சேர்ந்த அக்பர்
அலி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சென்னையில் தங்கியிருந்த உதயகுமாரை கடந்த 10ஆம் திகதி, போதைப்பொருள் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ போதைப்பொருளையும்
கைப்பற்றினர்.
அதன் பின்னரான விசாரணைகளில் போதைப்பொருள் விநியோகத்தரான அக்பர் அலியை கைது செய்து அவரிடமிருந்து 54 கிலோ போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.