நீண்ட விடுமுறையான வார இறுதி நாட்களில் நெடுஞ்சாலை வருமானம் உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த 22ஆம் திகதி நெடுஞ்சாலைகளில் 140,791 வாகனங்கள் பயணித்து 46.4 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன் 23ஆம் திகதி 145503 வாகனங்கள் பயணித்து 50.1 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளன. இந்த வருவாய் நெடுஞ்சாலையில் ஒரு நாளில் பெறப்பட்ட அதிக வருவாயாக பதிவுகளில் இடம்பெற்றுள்ளது.