வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த கைதியொருவர், மான் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சுதந்திரமாக நடமாடிய மான் ஒன்று திடீரென அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், உடனடியாக தெம்பரகவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வரபலான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தெம்பரகவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (09) பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








