மட்டக்களப்பு மாநகர சபையானது நத்தார் தினத்தை முன்னிட்டும், 2024 புதுவருட பிறப்பை வரவேற்கும் முகமாகவும் முன்னுதாரணமாக செயற்பட்டு, பிரமாண்ட படைப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
மக்களால் தேவையற்றது என்று தூக்கி வீசப்பட்ட கழிவு பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு 45 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பாலன் கூடு ஒன்றையும் அமைத்து, மக்களின் பார்வைக்காக காந்தி பூங்காவில் காட்சிக்கு வைத்து, மட்டு நகரை அழகுபடுத்தியுள்ளது.
கழிவு பொருட்களை கொண்டு அழகான படைப்பை உருவாக்க முடியும் என்று வருட இறுதியில் கூட வாழ்க்கைக்கான நம்பிக்கையை மக்களின் மனதில் ஏற்படுத்திய மட்டக்களப்பு மாநகர சபையையும், அதற்க்கு உதவியாக செயற்பட்ட சக ஊழியர்களையும் battinaatham ஊடகம் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.