ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரையை உருவாக்கும் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் வெய்ல் கார்னெல் மருத்துவக் கல்லூரிக்கு 8.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரை உடலுறவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் உட்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுவதுடன், விந்தணுக்களின் இயக்கத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
தற்போது பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் ஆண்களுக்கான கருத்தடைத் தெரிவுகளில் புதிய வாய்ப்பு உருவாகலாம்.








