விஜயகாந்த் உடல்நிலை மிகவும் நலிவடைந்த நிலையில் இன்று (டிசம்பர் 28) காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
விஜயகாந்த் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் குவிந்து வந்தனர்.
அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.