நாட்டில் DCSL மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.
இதன்படி DCSL சாராயம் 750 மில்லி லீற்றர் 90 ரூபாவால் அதிகரிக்கிறது.
375 மில்லி லீற்றர் சாராயம் 50 ரூபாவாலும், 180 மில்லி லீற்றர் 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த விலை ஏற்றமானது 2024ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
வெட் என்ற பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பினால் இதன் விலையும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.