Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலையக மக்களை கெளரவித்து முத்திரை வெளியிடும் இந்தியா; முதல் முத்திரையை கிழக்கு ஆளுநரிடம் கையளிக்க ஏற்பாடு!

மலையக மக்களை கெளரவித்து முத்திரை வெளியிடும் இந்தியா; முதல் முத்திரையை கிழக்கு ஆளுநரிடம் கையளிக்க ஏற்பாடு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு
போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில்,
மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் தேவையாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் ஏற்பாட்டிலும், மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய தபால்துறை அமைச்சினூடாக முத்திரையொன்று வெளியிடப்பட்டு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

புதுடில்லியில், நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடாவினால், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முதல் முத்திரை கையளிக்கப்படவுள்ளது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு, இந்தியத் தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்மூலம், இலங்கைக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பிலான வரலாறு, இந்தியர்களுக்கு எளிதில் எடுத்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்திரையை, உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைப் கொண்டுள்ள இந்தியாவின் 155,015க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களிலிருந்து, எதிர்வரும் 30ஆம் திகதிக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும்.

உதவி, கடமை, பொறுப்புணர்வு என்ற எண்ணப்பாடுகளுக்கு அப்பால், நம் மக்களை
நாம் தான் கௌரவிக்க வேண்டும், அவர்களுக்கு நாம் தான் அங்கீகாரமளிக்க வேண்டுமென்ற
தொனியில், இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக முத்திரையொன்று
வெளியிடப்படுவது, இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நட்புறவைப் பறைசாற்றி நிற்ப
தோடு, மலையக மக்களால் இலங்கைக்கும் கௌரவம் கிடைத்திருக்கிறது.

இவ்வாறானதொரு கௌரவிப்பு நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முதல் முத்திரையைக் கையளிக்க நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
Next Post
உருளைக் கிழங்கு தொடர்பில் விசாரணை!

உருளைக் கிழங்கு தொடர்பில் விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.