Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உருளைக் கிழங்கு தொடர்பில் விசாரணை!

உருளைக் கிழங்கு தொடர்பில் விசாரணை!

3 years ago
in செய்திகள்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக் கிழங்கு தொடர்பில்
விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே ஆளுநர் இதனை குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாய நிலை, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள்,
அபிவிருத்தித் திட்டங்கள், மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் உள்ளிட்ட பல விடயங்கள்
இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாவட்ட விவசாயிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கில் பற்றீரியா தொற்று
ஏற்பட்டமை தொடர்பில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் வட மாகாண பிரதி பணிப்பாளரிடம் ஆளுநர்
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேள்விகளை முன்வைத்தார்.

எவ்வித தரச் சான்றிதழும் இன்றி குப்பிளான் களஞ்சியசாலைக்கு விதை உருளை கிழங்குகள் எவ்வாறு
கொண்டுவரப்பட்டன, இதற்கான அனுமதியை வழங்கியது யார்?, தற்போது அவற்றை அழிப்பதற்குரிய
செலவுகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மாற்று செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கேள்விகளை முன்வைத்தார்.

இந்நிலையில் விதை உருளைக்கிழங்கு இறக்குமதியில் மோசடிகள் இடம்பெற்றிருக்க கூடும் என்பதால் அது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாணஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தினார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் அமுல்படுத்த உத்தேசித்துள்ள இருபத்தையாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் இதுவரை உரிய தெளிவுபடுத்தல்கள் கிடைக்கவில்லை என கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான விசேட கூட்டத்தை
விரைவில் ஏற்பாடு செய்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.