Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய மயக்க மருந்தினால் பறிபோனது கர்ப்பிணியின் உயிர்; மேலும் பலருக்கு ஒவ்வாமை!

இந்திய மயக்க மருந்தினால் பறிபோனது கர்ப்பிணியின் உயிர்; மேலும் பலருக்கு ஒவ்வாமை!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய மயக்க மருந்தினால் ஏற்பட்ட பிரச்சினையால் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலருக்கு அந்த மருந்தினால் ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவால், இந்திய மயக்க மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மியன்மார் அரசிடம் இருந்து அரசு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்து குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே உடனடியாக மருந்துகளை ஆய்வக ஆய்வுக்கு உட்படுத்துமாறு சுகாதார அமைச்சகத்திடம் ஆய்வக அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய அரசிடமிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மயக்க மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மியன்மார் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட மருந்துகள் விநியோகிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் இரசாயன பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அந்த மருந்துகள் இலங்கையின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை, மியன்மார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மருந்துகள் என்றாலும், அவை பங்களாதேஷில் தயாரிக்கப்பட்டவை என்றும், இந்த மருந்துகள் மியன்மாரிலும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரசாயனப் பரிசோதனையின்றி வழங்கப்பட்ட இந்திய மயக்க மருந்தின் சிக்கலால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இரசாயனப் பரிசோதனையின்றி எந்த அடிப்படையில் இதேபோன்ற மருந்தைப் பயன்படுத்துவது என அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.எனவே இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
‘புன்னைக்குடா’ பெயர் சூட்டப்பட்டது!

'புன்னைக்குடா' பெயர் சூட்டப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.