மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், புன்னைக்குடா வீதிக்கு மீண்டும் அதே ‘புன்னைக்குடா வீதி’ எனப் பெயர் சூட்டப்பட்டு, பெயர்ப்பலகை நேற்று திங்கட்கிழமை (10) போடப்பட்டுள்ளது.
‘ஏறாவூர் புன்னைக்குடா வீதி’ எனபுழக்கத்திலிருந்து வந்த பெயரைமாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியைத் தொடர்ந்து பலரும் அதிருப்தி வெளியிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் சுற்றாடல்துறை அமைச்சருமான நஸீர் அஹமட் எடுத்த முயற்சியினால் மீண்டும் அவ்வீதிக்கு ‘புன்னைக்குடா வீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.