இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திருகோணமலையில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் கடந்த ஆண்டு திருச்சிக்கு
சென்றிருந்தார்.
இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வோம் என தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் இன்று (06.01.2024) முதல் ஒரு வாரம் பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இவ் விழாவின் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று (06.01.2024) காலை 10 மணிக்கு திருகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகளும் 100-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திருகோணமலை வந்துள்ளனர்.