வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (5 மற்றும் 6) நாடு முழுவதும் பதிவான சாலை விபத்துகளில் 25 பேர் உயிரிழந்தனர்.
நிட்டம்புவ, சபுகஸ்கந்த, நுவரெலியா, ருவன்வெல்ல, இங்கிரிய, பகமூன, புத்தளம், குளியாபிட்டிய, குருநாகல், வீரகெட்டிய, மெதிரிகிரிய, கொஸ்வத்தை, எல்பிட்டிய, வெலிமடை, ஹன்வெல்ல, ஜா-எல, பன்வெல்ல, ஹட்டன்வில, பன்வெல்ல, உட்பட பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பலியானவர்களில் 6 பெண்கள், சிவில் பாதுகாப்பு படை வீரர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் ரஷ்ய நாட்டவர் ஆகியோர் அடங்குவர்.
எல்பிட்டிய மற்றும் ஜா-எல பிரதேசங்களில் இரண்டு தம்பதிகள் சம்பந்தப்பட்ட சோக சம்பவங்கள் பதிவாகின.
எல்பிட்டியவில் மோட்டார் சைக்கிளும் கெப் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 42 வயது கணவனும் 38 வயது மனைவியும் உயிரிழந்தனர்.
கெப், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றது.
ஜா-எலவில் மற்றுமொரு தம்பதியினர் துடெல்லவில் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் மோதியதில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 46 வயதுடைய ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.