Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்; மீனவர்களுக்கும் கடற்பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கை!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் இலங்கைக்குக்  கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மட்டக்களப்புக்குக் கிழக்காக ஏறத்தாழ 650 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இத் தொகுதி வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை விட்டு விலகி, நாளை (15) ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதன் பின் அத் தொகுதி நவம்பர் 16 ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புயலாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 050N –  150N இற்கும் கிழக்கு நெட்டாங்குகள் 800E – 900E  இற்கும் இடையில் உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் இன்று (14) அதிகாலை 05.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக இப் பிரதேசங்களை விட்டு விலகி பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக  அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது வடக்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
செய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

November 14, 2026
அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!
செய்திகள்

அரசியலுக்கு மீண்டும் வரமாட்டேன்; திட்டவட்டமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர!

November 14, 2026
நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!
செய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

November 14, 2026
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

November 14, 2026
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

November 14, 2026
Next Post
நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு