மட்டக்களப்பு ஜெயந்திபுரம் ‘முழுமதி’ சகவாழ்வு சங்கத்தின் சிறு நன்கொடை திட்ட இறுதி நாள் நிகழ்வு நேற்றையதினம் (11.04.2023) கொஸ்தமனே கொஸ்பல் மண்டபத்தில் நடைபெற்றது. ஜெயந்திபுரம் ‘முழுமதி’ சகவாழ்வு சங்கத்தின் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி முகுந்தன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வன்னியசிங்கம் வாசுதேவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லரெட்ணம் துஜோகாந்த், ACTED நிறுவனத்தின் பிரதி திட்ட முகாமையாளர் திரு.ரெட்ணசிங்கம் கஜேந்திரன், மட்/ கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் அதிபர் திரு.சரவணமுத்து கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் விசேட அதிதிகளாக கொஸ்தமனே கொஸ்பல் தேவாலய போதகர் வணக்கத்திற்குரிய பீட்டர் வில்லியம்ஸ் மரியதாஸ், ஓய்வு நிலை அதிபர் திரு.சோமசூரியம் அருளானந்தம், மட்/ கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் பிரதி அதிபர் திரு.ஏரம்பமூர்த்தி கோணேஸ்வரமூர்த்தி, சித்திரக்கலை ஆசிரியர் திரு.ஞானசிங்கம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கௌரவ அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் திருமதி. விக்டரின் ரெலிக்டா டொமினிக் , அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.லோகிதராஜா தீபாகரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.மெடில்டா லோரன்ஸ் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர் திருமதி. மங்கையற்கரசி சுதாகரன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ” நல்லதோர் உலகம் செய்வோம்” எனும் கருப்பொருளில் வீதி நாடகம் அரங்கேறியதுடன் சித்திரக்கண்காட்சி கூடமும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.