மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167 ஏ கிராம சேவகர் பிரிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர்
இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், புதிய காத்தான்குடி பதியா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் உள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் இடம்பெயர்ந்து, உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களின் குடும்ப விபரங்களை, குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர்கள்
சேகரித்து வருகின்றனர்.
புதிய காத்தான்குடி வடக்கு, கிழக்கு, தெற்கு, ரிஸ்வநாதர் ஹைராத் நகர், பரீட் நகர், சுகதா பகுதி, ஜன்னத் மாவத்தை என பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.