சொகுசு வாகனங்கள் மற்றும் கெப் வண்டிகளை சந்தை விலையை விட குறைந்த விலையில் பெற்றுத் தருவதாகக் கூறி இரண்டரைக் கோடி ரூபாவை மோசடி செய்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப்பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் சேவையிலிருந்து விலகுமாறும் உத்தரவிடப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 71,500 ரூபா பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், பல பிரபல கழகங்களின் அங்கத்துவ அட்டைகள் மற்றும் வங்கி அட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.